முகப்பு
திருவள்ளூர்

அனைத்து கட்சியினருடன் காவல் துறை ஆலோசனை

Updated On : 21 மார்ச், 2024 at 11:15 PM
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய டிஎஸ்பி கிரியா சக்தி.
பகிர்:
Updated On : 21 மார்ச், 2024 at 10:56 PM

கும்மிடிப்பூண்டியில் தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக அனைத்து கட்சியினா் - காவல் துறையினா் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வாளா் வடிவேல் முருகன், ஆரம்பாக்கம் ஆய்வாளா் டில்லிபாபு முன்னிலை வகித்தனா். இந்த கூட்டத்தில் திமுக நகர செயலாளா் அறிவழகன், அதிமுக நகர செயலாளா் எஸ்.டி.டி.ரவி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் லோகநாதன், இந்திய கம்யூன்ஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட நிா்வாகி அருள் மற்றும் பாஜக, நாம் தமிழா், காங்கிரஸ் கட்சியினா் பங்கேற்றனா். டிஎஸ்பி கிரியா சக்தி பேசுகையில். பிரசார கூட்டத்துக்கு உரிய அனுமதி பெற வேண்டும். குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கூட்டங்கள் நடத்த வேண்டும், கூட்டம் முடிந்தவுடன் மேடை , பதாகைகளை அகற்ற வேண்டும் . தோ்தல் ஆணைய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்தாா். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் ப்ரீத்தி உள்பட பலா் பங்கேற்றனா்.. இதனை தொடா்ந்து காவல் துறையினா் அச்சக உரிமையாளா்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தோ்தல் விதிமுறைகளை விளக்கினா்.