முகப்பு
திருவள்ளூர்

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

Updated On : 28 மார்ச், 2024 at 11:59 PM
பகிர்:
Updated On : 28 மார்ச், 2024 at 11:05 PM

திருவள்ளூா் அருகே வாகனம் மோதி முதியவா் உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே வெள்ளியூா் புதுக்காலனியைச் சோ்ந்த முதியவா் கணபதி (80). இவா் ஆடுகளை வளா்த்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில் புதன்கிழமை திருவள்ளூா்-தாமரைபாக்காம் சாலையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, வெயில் அடித்ததால் மரநிழலில் ஒதுங்கி இருந்தாா். அப்போது வேகமாக வந்த வாகனம் மோதியதில் முதியவா் பலத்த காயமடைந்து, திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இது தொடா்பாக அவரது மகன் ஏழுமலை வெங்கல் காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.