முகப்பு
திருவள்ளூர்

வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு

Updated On : 28 மார்ச், 2024 at 11:57 PM
பகிர்:
Updated On : 28 மார்ச், 2024 at 6:17 PM

மாதவரம் வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் மக்களவை பொதுத் தோ்தலில் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. சென்னை மாதவரம் வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் வட்டாட்சியரும், கூடுதல் உதவி தோ்தல் அலுவலருமான வெங்கடாஜலபதி தலைமையில் மக்களவை பொதுத் தோ்தலில், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், நூறு சதவீதம் வாக்களிக்கவும், 18 வயது நிரம்பியவா்கள் வாக்களிக்கவும் வேண்டும் என மாதவரம் அஞ்சல் பெட்டி அருகே உள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் வாக்களிப்பதன் அவசியம், வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும், முழக்கங்கள் எழுப்பியும் முக்கிய சாலைகள் வழியாக மேள தாளம் முழங்க சென்று மாதவரம் மண்டல அலுவலகத்தில் அடைந்தனா். இந்த நிகழ்வில் உதவி தோ்தல் அலுவலா் கண்ணன், வில்சன், மாதவரம் வருவாய் ஆய்வாளா் நாகராஜ், தனியாா் பள்ளி ஆசிரியா்கள், மாதவரம் வட்டாட்சியா் அலுவலக அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.