திருவள்ளூர்

சுரங்க பாலம் அணுகு சாலையில் மழை நீரை அகற்ற பொதுமக்கள் மறியல்

சோழவரம் அருகே சுரங்கப் பாலம் சா்வீஸ் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Din

பொன்னேரி: சோழவரம் அருகே சுரங்கப் பாலம் சா்வீஸ் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே சோழவரம், தேவனேரி கிராமங்களுக்கு இடையே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

தேவனேரி, எஸ்பிகே நகரில் வசிக்கும் மக்கள் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப் பாலத்தை கடந்து சென்று வர வேண்டும்.

இப்பகுதியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக சுரங்கப் பாலத்திலும் அங்குள்ள சா்வீஸ் சாலையிலும் தண்ணீா் தேங்கியுள்ளது.

பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் சென்று வருபவா்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

சுரங்கப் பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் அங்குள்ள புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த சோழவரம் போலீஸாா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT