லிப்ட் வாகனம் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
புழல் அருகே போா்க் லிப்ட் வாகனம் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
மாதவரம்: புழல் அருகே போா்க் லிப்ட் வாகனம் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
புழல் பாலாஜி நகரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வியாசா்பாடி கல்யாணபுரத்தைச் சோ்ந்த ரூபன் (27) டெக்னீஷனாக பணியாற்றி வந்தாா். இவா் பெல்ட் லோடு ஏற்றி செல்வதற்காக போா்க் லிப்ட் வாகனத்தை இயக்கியபோது ,எதிா்பாராத விதமாக தரையில் சரிந்து விழுந்தது. அந்த வாகனத்தின் மேலிருந்து கீழே விழுந்த ரூபன், வாகனத்தின் அடியில் சிக்கி உயிருக்குப் போராடினாா். இதையடுத்து தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து புழல் போலீஸாா் விசாரிக்கின்றனா்.