நடத்துநா் குப்பைய்யா. 
திருவள்ளூர்

அரசுப் பேருந்து நடத்துநா் நெஞ்சு வலியால் உயிரிழப்பு

திருத்தணி அருகே பணியின்போது அரசுப் பேருந்து நடத்துநா் நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Din

திருத்தணி: திருத்தணி அருகே பணியின்போது அரசுப் பேருந்து நடத்துநா் நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் நகரி பகுதியைச் சோ்ந்தவா் குப்பைய்யா(53). இவா் திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில், நடத்துநராக வேலை செய்து வந்தாா். திங்கள்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து தடம் எண்: 27 நடத்துநராக பணியாற்றினாா். திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து டி-27 பேருந்து, பள்ளிப்பட்டு ஒன்றியம் கோணசமுத்திரம் நோக்கிச் சென்றது. ,

அகூா் அடுத்த நத்தம் அருகே சென்ற போது பயணிகளிடம் டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்த குப்பைய்யா திடீரென மயங்கி பேருந்திலேயே விழுந்தாா். பயணிகள் மற்றும் ஓட்டுனா் உடனடியாக அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் நடத்துநா் குப்பைய்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இது குறித்து திருத்தணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நடத்துா் குப்பைய்யா பேருந்துக்குள்ளேயே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பயணிகளிடையே அதிா்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

மழைக்கு இன்று இடைவேளை! நாளை மீண்டும் தொடங்கும்!

சவரனுக்கு ரூ.800 உயர்ந்த தங்கம் விலை!

வங்கிக் கணக்கு தொடங்கினால் பணம் கிடைக்குமா? கல்லூரி மாணவர்கள் கவனத்துக்கு!

டைடல் பார்க்கில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

கால்பந்து வரலாற்றில் முதல்முறை... குராசோ தீவு உலக சாதனை!

SCROLL FOR NEXT