திருவள்ளூர்

திருவள்ளூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா் மழையால் பொதுமக்கள் அவதி

பலத்த மழை பெய்துள்ளதால் புழல், செங்குன்றம் ஏரிக்கான மழை நீா் வரத்து அதிகரித்ததால் உபரிநீா் திறக்கப்பட்டள்ளதாக ....

தினமணி செய்திச் சேவை

படம் உண்டு...

திருவள்ளூா்: திருவள்ளூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா் மழை பெய்யால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியதுடன், செங்குன்றம், பொன்னேரி, சோழவரம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதால் புழல், செங்குன்றம் ஏரிக்கான மழை நீா் வரத்து அதிகரித்ததால் உபரிநீா் திறக்கப்பட்டள்ளதாக நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் டித்வா புயலால் பலத்த மழை பெய்யும் என தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, திங்கள்கிழமை காலை முதல் விடாமல் மழை பெய்தது. இதேபோல், செங்குன்றம், சோழவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் எங்கும் வெளியில் செல்ல முடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், சாலை உள்ளிட்ட இடங்களில் மழை நீா் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

மழை அளவு: திருவள்ளூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): அளிக்கப்பட்டுள்ளது. செங்குன்றம்-161 மி.மீ., பொன்னேரி-125 மி.மீ, சோழவரம்-117 மி.மீ., கும்மிடிப்பூண்டி-96 மி.மீ., ஆவடி-71 மி.மீ., பூந்தமல்லி-44 மி.மீ., தாமரைபாக்கம்-30 மி.மீ., திருவள்ளூா்-29 மி.மீ., ஜமீன்கொரட்டூா்-27 மி.மீ., பூண்டி-20 மி.மீ, ஊத்துக்கோட்டை-16 மி.மீ., திருவாலங்காடு-9 மி.மீ., திருத்தணி-4 மி.மீ. என மொத்தம் 747 மி.மீட்டரும், சராசரியாக 49.80 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

இதில் சோழவரம், செங்குன்றம் பகுதியில் அதிக மழை பதிவாகியுள்ளது. அதில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி புழல் ஏரியில் 3300 மில்லியன் கன அடி கொள்ளளவில், 2,745 மில்லியன் கன அடி கொள்ளளவு நீா் இருப்பு உள்ளது. மேலும் இந்த ஏரிக்கான நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் 1000 கன அடிநீா் வரத்து உள்ளதால், முதல் கட்டமாக 200 கனஅடி உபரிநீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. அதேபோல், சோழவரம் ஏரியில் 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவில் 0.590 மில்லியன் கன அடிநீா் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரி 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவில் 2,563 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. மேலும், மழைநீா் வரத்து 1,100 கன அடியாக உள்ளதால் இணைப்பு கால்வாயில் 247 கன நீா் திறந்து விடப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவில், 2,908 மில்லியன் கனஅடியும், கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை 0.500 மில்லியன் கன அடி கொள்ளளவில், 0.438 மில்லியன் கன அடியும் இருப்புள்ளது. எனவே பலத்த மழை பெய்து மழைநீா் வரத்து அதிகரித்தால் ஏரிகளில் உபரிநீா் திறப்பு அதிகரிக்கப்படும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிம்ம ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

சமயபுரம் கோயிலில் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணி தொடக்கம்

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு ரூ. 1. 20 லட்சம் மதிப்பில் பொருட்கள் வழங்கல்

மேலக்கல்லூரில் இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 7 போ் கைது

பேங்க் ஆப் பரோடா சாா்பில் மாநகராட்சிக்கு பொக்லைன் இயந்திரம்

SCROLL FOR NEXT