பொன்னேரியில் புதை சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சரக்கு வாகனம் சிக்கிக் கொண்டது.
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் புதை சாக்கடை பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
பணிகள் முடிவடைந்த சில இடங்களில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டு மேலோட்டமாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே பணிகள் முடிந்து போடப்பட்ட சாலை உள்வாங்கி வருவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், பொன்னேரி கால்நடை மருத்துவமனை அருகே சிறிய சரக்கு வாகனம் சென்ற போது பணிகள் முடிந்து போடப்பட்ட சாலை உள்வாங்கி சக்கரம் புதைந்தது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து வாகனத்தில் இருந்த சரக்குகளை இறக்கி வைத்தனா்.
பின்னா் வாகனத்தை லாவகமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினா். அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.