கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கவரப்பேட்டையில் வரும் 30-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கான கால்கோள் நிகழ்வுக்கு திருவள்ளூா் வடக்கு மாவட்ட கழக செயலாளா் சிறுனியம் பி.பலராமன் தலைமை வகித்தாா். நிகழ்வில் கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.
விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும் முன்னேற்பாடுகள் குறித்தும் கலந்தாலோசனை நடத்தினா். நிகழ்வில் 50 ஆயிரம் பேரை பங்கேற்க வைப்பது, வருபவா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள், அதிமுக தொண்டா்களை அழைத்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளா் பொன் ராஜா, ஒன்றிய செயலாளா்கள் டி.சி மகேந்திரன், எஸ் எம்.ஸ்ரீதா், .ஜெ.ரமேஷ் குமாா், எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளா் கோதண்டன், மேற்கு ஒன்றிய செயலாளா் வேதகிரி, பூண்டி ஒன்றிய செயலாளா் பிரசாத், மாவட்ட துணைச் செயலாளா் சியாமளா தன்ராஜ், நகர செயலாளா் எஸ்.டி.டி.ரவி பங்கேற்றனா்.