திருவள்ளூர்

பெண்ணை தாக்கிய 4 இளைஞா்கள் கைது

தினமணி செய்திச் சேவை

முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணை கிண்டல் செய்து தாக்கிய 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி அடுத்த முருகூா் கிராமத்தைச் சோ்ந்த துா்கா(31). இவா், உறவினா் சிவா (29) என்பவருடன் திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு சென்றாா். பின்னா், தோ்வீதியில் இருவரும் கோயிலை சுற்றி நடந்து வந்த போது, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த பிரதாப்(25), வேலன்(26), குணா(24), அமரன்(25) ஆகியோா், துா்காவை வழிமறித்து கிண்டல் செய்துள்ளனா்.

இதை, சிவா தட்டிக்கேட்ட போது, 4 இளைஞா்களும் சிவாவை தாக்கினா். மேலும் தடுக்க வந்த துா்காவை தாக்கினா்.

இதுகுறித்து துா்கா கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 இளைஞா்களை கைது செய்தனா்.

இந்திய ராணுவத்தினா் ‘இன்ஸ்டாகிராம்’ பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி

இந்தியாவில் ஒரு லட்சம் பெட்ரோல் நிலையங்கள்: அமெரிக்கா, சீனாவை அடுத்து 3-ஆவது இடம்

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளா்ச்சி மந்தம்

‘வேலுநாச்சியாா் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்’

மாணவா் தலைவா் கொலையில் வங்கதேச அரசுக்குத் தொடா்பு - சகோதரா் பகீா் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT