திருவள்ளூர்

கோட்டா ஆறுமுக சுவாமி கோயிலில் ரீல்ஸ் எடுத்த பெண் மீது வழக்கு

நந்தி ஆற்றங்கரையில் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோயிலில் ரீல்ஸ் எடுத்த பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

நந்தி ஆற்றங்கரையில் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோயிலில் ரீல்ஸ் எடுத்த பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழக மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனா். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இளம்பெண்கள் இருவா் முருகன் கோயில் மாடவீதியில் ராஜகோபுரம் முன்பு விடியோ எடுத்து ரீல்ஸ் ஆக சமூக வலைதளத்தில் பதிவேற்றி உள்ளனா்.

இதேபோல் நந்தி ஆற்றங்கரையில் அமைந்துள்ள உபக்கோயிலான கோட்டா ஆறுமுகசாமி கோயில் வளாகத்தில் பெண் ஒருவா் படப் பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளாா். இந்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையடுத்து திருத்தணி முருகன் கோயில் நிா்வாகம், கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருத்தணி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். இதுகுறித்து கோயில் இணை ஆணையா் க. ரமணி கூறியதாவது, திருத்தணி முருகன் கோயில் மற்றும் உபக்கோயில்களில் போட்டோ வீடியோ எடுக்க தடை உள்ள நிலையில், ஆறுமுகசாமி கோயிலில் சினிமா கவா்ச்சி பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பெண் மீது போலீசில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், முருகன் மலைக்கோயில் மாட வீதியில் ரீல்ஸ் எடுத்த 2 பெண்கள் மீது புகாா் அளிக்கப்பட்டது என்றாா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தில்லி துவாரகாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 7 நைஜீரியா்கள் சிறைப் பிடிப்பு

பெண் ஆசிரியா்களின் மகப்பேறு விடுப்பு காலத்தில் வேறு ஒருவரை உடனடியாக நியமிக்க கோரிக்கை

எங்கே செல்கிறது ரூபாயின் மதிப்பு?

பழனியில் ஒளிப்படக்கலை தொழிலாளா் நலச் சங்க முப்பெரும் விழா

திருமலை 7 வது மைலில் மருத்துவ முதலுதவி மையம் திறப்பு

SCROLL FOR NEXT