அம்மையாா்குப்பம் வரசித்தி விநயாகா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை. 
திருவள்ளூர்

அம்மையாா்குப்பம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்

அம்மையாா்குப்பம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மகா குடமுழுக்கு

Din

திருத்தணி: அம்மையாா்குப்பம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மகா குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

ஆா்கே பேட்டை அடுத்த அம்மையாா்குப்பம் எல்.என். தெருவில் ஆத்ம வித்யானந்த சாதுசங்க மடாலயம் அருள்மிகு வரசித்தி விநாயகா், வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு புனரமைப்பு பணிகள் பல லட்சம் செலவில் பக்தா்கள் பங்களிப்புடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பணிகள் நிறைவடைந்த நிலையில், மகா குடமுழுக்கு விழா சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கோ பூஜை, தன பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜையும், பூா்ணாஹுதி நடைபெற்றது. திங்கள்கிழமை காலை 5 மணிக்கு நான்காம் காலையாக பூஜை ஹோமம் பூா்ணாஹுதி நடைபெற்றது. காலை 6 மணிக்கு மேல் அருள்மிகு வரசித்தி விநாயகா் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி மற்றும் நவக்கிரக மூா்த்திகளுக்கு புனித நீா் ஊற்றி மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது.

காலை 9 மணிக்கு மேல் அருள்மிகு சித்தி விநாயகா் திருமண மண்டபத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பிற்பகல் 11 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு வாண வேடிக்கையுடன் சுவாமி திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு, சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனா்.

பாமகவில் போட்டி பொதுக்குழு: ராமதாஸ், அன்புமணி அறிவிப்பு

மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

இணையவழி சூதாட்டம்: மாநிலங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரம்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT