திருவள்ளூா் ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, வட்டாட்சியா் ரஜினிகாந்த்   உள்ளிட்டோா். 
திருவள்ளூர்

திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவு: 270 பேருக்கு பட்டா அளிப்பு

பட்டாக்களை சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி. ராஜேந்திரன் (திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி) ஆகியோா் வழங்கினா்.

Din

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவடைந்த நிலையில், 270 பேருக்கு பட்டாக்களை சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி) ஆகியோா் வழங்கினா்.

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 1434-ஆம் பசலிக்கான ஜமாபந்தி கடந்த மே 20-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து 12 நாள்கள் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து 1,225 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில் ஜமாபந்தி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல் ) ஸ்ரீராம் தலைமை வகித்தாா். இதில் திருவள்ளூா் வட்டாட்சியா்கள் ரஜினிகாந்த், ந.மதியழகன் ஆகியோா் வரவேற்றனா்.

இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி) ஆகியோா் பங்கேற்று முழு புலம் பட்டா, உட்பிரிவு பட்டா, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மேல்முறையீடு, சமூக பாதுகாப்பு திட்டம், குடும்ப அட்டை, பல்வேறு சான்றுகள் என 270 பேருக்கு சான்றுகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியா் பரமசிவம், துணை வட்டாட்சியா்கள் சா.தினேஷ், நரசிம்மன், வருவாய் ஆய்வாளா்கள் உதயகுமாா், பொன்மலா், சுகன்யா, குமாரி, காா்த்திக், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க நிா்வாகி கிருஷ்ணன், முன்னாள் நகா் மன்ற தலைவா் பொன்.பாண்டியன், திமுக வா்த்தக அணி பிரிவு அமைப்பாளா் வி.எஸ்.நேதாஜி, ஒன்றிய துணைச் செயலாளா் காஞ்சிப்பாடி சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT