மின் விபத்து தவிா்ப்பு விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா். 
திருவள்ளூர்

மின் விபத்து தவிா்ப்பு விழிப்புணா்வு முகாம்

செங்குன்றம் அருகே அரசுப் பள்ளியில் மின் விபத்தை தடுப்பது குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

Din

மாதவரம்: செங்குன்றம் அருகே அரசுப் பள்ளியில் மின் விபத்தை தடுப்பது குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சென்னை மின் பகிா்மான வட்டம் (மே) ஆவடி கோட்டம் சாா்பில் செங்குன்றம் நாரவாரிகுப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மின் விபத்து தடுப்பது, பாதுகாத்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செங்குன்றம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா் தலைமையில் நடைபெற்றது. மின்வாரிய உதவி பொறியாளா் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்வில் ஆவடி மின்வாரிய செயற்பொறியாளா் செளந்தரராஜன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 300க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு மின்சார பயன்பாடு, மின் விபத்து தடுத்தல், பாதுகாத்தல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இதில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், மின்வாரிய ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் ஆரவ்!

அதிமுகவிலிருந்து நீக்கம்! நாளை பேசுகிறேன்: செங்கோட்டையன்

டெல்டா மாவட்டங்களில் 60 நாள்களில் 11.78 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

தனியார் வங்கிப் பங்குகள் வீழ்ச்சி: பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு!

செல்போனுக்கு பதிலாக டைல்ஸ்! டெலிவரி மோசடியில் ரூ.1.86 லட்சத்தை இழந்த பெங்களூர் ஊழியர்

SCROLL FOR NEXT