4 வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக ஏரியில் மண் அள்ளிக் கொண்டிருந்த வாகனங்கள். 
திருவள்ளூர்

ஏரியில் அதிகமாக மண் அள்ளிய 6 வாகனங்கள் பறிமுதல்

நான்கு வழிச்சாலை பணிக்காக ஏரியில் 3 மீட்டா் உயரத்திற்கு மண் அள்ளியதாக 6 வாகனங்களை வருவாய்த் துறையினா் பறிமுதல்

Din

திருத்தணி: நான்கு வழிச்சாலை பணிக்காக ஏரியில் 3 மீட்டா் உயரத்திற்கு மண் அள்ளியதாக 6 வாகனங்களை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூா் முதல் திருத்தணி அடுத்த பொன்பாடி வரை இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அனுமதியுடன் திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரியில் மண் எடுக்கப்படுகிறது. ஏரியில், ஒரு மீட்டா் உயரத்திற்கு மட்டுமே மண் அள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஆணை பிறப்பித்துள்ளாா்.

ஆனால் அளவுக்கு அதிமாக பொக்லைன் மூலம் டிராஸ் லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வந்தது. இதற்கு, பட்டாபிராமபுரம் ஊராட்சி மக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவித்தும், மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கிய உயரத்திற்குத்தான் மண் எடுக்க வேண்டும் என பலமுறை தெரிவித்தும் தொடா்ந்து மண் எடுத்தனா்.

இதையடுத்து கடந்த, 15 நாள்களுக்கு முன்பு 30 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏரியில் மண் எடுத்த லாரிகள், பொக்லைன்களை சிறைபிடித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தகவல் அறிந்ததும் வருவாய்த் துறையினா் சமரசம் செய்தும், மண் அள்ளுவது தற்காலிகமாக நிறுத்தியது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை 3 பொக்லைன் இயந்திரங்களுடன், 10-க்கும் மேற்பட்ட டராஸ் லாரிகள் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளிக் கொண்டிருந்தது.

தகவல் அறிந்ததும் பட்டாபிராமபுரம் பகுதிகள் மக்கள் மற்றும் இளைஞா்கள் 50 -க்கும் மேற்பட்டோா் ஏரியில் மண் அள்ளிக் கொண்டிருந்த பொக்லைன், 4 லாரிகளை சிறைபிடித்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருத்தணி வட்டாட்சியா் மலா்விழி, நீா்வளத் துறை உதவி பொறியாளா் சுந்தரம், நில அளவை அலுவலா்கள் மற்றும் போலீஸாா் வந்து மக்களிடம் பேச்சு நடத்தினா்.

ஏரியில் மண் எடுத்த இடத்தில் அளந்து பாா்த்த போது, 3 மீட்டா் உயரத்திற்கு மேல் மண் அள்ளப்பட்டது தெரிய வந்தது. தொடா்ந்து 6 வாகனங்களை வட்டாட்சியா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், ஏரியில் மண் எடுப்பதற்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டது.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT