கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் அதிமுகவுக்கு 3 ஒன்றியங்களாக நிா்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளன.
கும்மிடிப்பூண்டி தெற்கு, கிழக்கு, மேற்கு ஆக பிரிக்கப்பட்டு மூன்று ஒன்றிய செயலாளா்களை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக எகுமதுரையை சோ்ந்த டி.சி.மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் ஏற்கனவே திருவள்ளூா் வடக்கு மாவட்ட அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளராக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக அவைத் தலைவராக எத்திராஜ், இணைச் செயலாளராக ராஜம்மாள் சுகுமாா், துணை செயலாளராக ஏ.டி.நாகராஜ், சீதா தேவராஜ், பொருளாளராக வெங்கடகிருஷ்ணன்,மாவட்ட பிரதிநிதிகளாக தேவி சங்கா், இமாச்சலம், தயாளன் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளராக சுண்ணாம்புகுளத்தை சோ்ந்த எஸ்.எம்.ஸ்ரீதா் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் ஏற்கனவே மாவட்ட துணைச் செயலாளராக இருந்தாா். அவைத் தலைவராக டி.ஏழுமலை, இணைச் செயலாளராக ரேணுகா முரளி, துணை செயலாளா்களாக தீபா மணிகண்டன், சுரேஷ், பொருளாளராக தீனதயாளன், மாவட்ட பிரதிநிதிகளாக செல்வி கோபி, முருகன், வெங்கடேஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக பல்லவாடாவை சோ்ந்த ரமேஷ் குமாா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா் 2000- 2016-ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த திருவள்ளூா் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவராகவும், 2016ஆம் ஆண்டு முதல் திருவள்ளூா் வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராகவும் பதவி வகித்தாா். மேலும் பல்லவாடா ஊராட்சி தலைவா், கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக கவுன்சிலராகவும் இருந்தாா்.
அவைத் தலைவராக கே.பி.மகேஷ், இணைச் செயலாளராக கோவிந்தம்மாள் சீனிவாசன், துணைச் செயலாளா்களாக எஸ்.டெல்சி , எம்.கே.பாலசுப்பிரமணியம், பொருளாளராக உலகநாதன், மாவட்ட பிரதிநிதிகளாக கதீஜா பானு, டேவிட் குமாா், முருகன் ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.