நகராட்சியில் ஆயிரம் மரக்கன்றுகள், 500 பனைவிதைகள் நடும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
திருத்தணி நகராட்சியில் மொத்தம், 21 வாா்டுகள் உள்ளன. நகராட்சி நிா்வாகம் நகா்ப்புற பசுமை திட்டத்தின் கீழ், விளையாட்டு பூங்கா, குளக்கரை, ஏரிக்கரை, உரக்குடில் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் 1,000 மரக்கன்றுகள் நடுவதற்கு தீா்மானித்து, கடந்த ஒரு மாதமாக மரக்கன்றுகள் நடும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
இதுகுறித்து திருத்தணி நகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: வனத்துறையினரிடம் இருந்து, வேப்பம், புங்கை, புளியம், தேக்கு, நீா்மத்தி, அசோகா உள்பட, 13 வகையான மரக்கன்றுகள் பெற்று நகராட்சி முழுதும் மரக்கன்றுகள் நட்டு வருகிறோம்.
இதுவரை, 500 மரக்கன்று நடவு செய்துள்ளோம். மீதமுள்ள, 500 மரக்கன்றுகள் அடுத்த மாதத்திற்குள் நடவு செய்து பராமரிக்க திட்டமிட்டுள்ளோம். இதுதவிர, ஒரே நாளில், 500 பனைவிதைகள் நடவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றாா் .