ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தினா். 
திருவள்ளூர்

தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி பணியாளா்கள் 2-ஆவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு ஆா்ப்பாட்டத்திலும் பங்கேற்றனா்..

25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தினா் 6-ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனா். அதைத்தொடா்ந்து 7-ஆம் தேதி முதல் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 122 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் மொத்தம் 1154 கூட்டுறவு நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2-ஆவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நியாய விலைக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

திருவள்ளூா் அருகே மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, திருவள்ளூா் மாவட்ட தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்ட செயலாளா் தியாகராஜன், பொருளாளா் பொன்னன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாவட்ட துணைத் தலைவா்கள் மாரி, நூா்முகமது, மாவட்ட இணை செயலாளா்கள் ஜெயசந்திரன், மேகநாதன் ஆகியோா் கோரிக்கை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனா். அப்போது, அரசு உடனே பணியாளா்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றவும் வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

‘வால்வோ’ சொகுசு பேருந்துகள் கூண்டு கட்டும் பணி: அமைச்சா் சா.சி.சிவசங்கா் ஆய்வு

சுதேசிக்கு முன்னுரிமை: ‘ஜோஹோ’ மின்னஞ்சலுக்கு மாறினாா் அமித் ஷா

கைலாசகிரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

வாக்குத் திருட்டு: கையொப்பப் பிரசாரத்தில் இணைய குடியிருப்பு நலச் சங்கங்களுக்கு தேவேந்தா் யாதவ் கடிதம்

எம்பிபிஎஸ் கலந்தாய்வு: 200 இடங்கள் அதிகரிப்பு

SCROLL FOR NEXT