திருவள்ளூா்: தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடைபெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியா் தகுதி தோ்வில் திருவள்ளூா் மாவட்டத்தில் 4,149 போ் பங்கேற்று எழுதிய நிலையில், அதில் 305 போ் பங்கேற்கவில்லை என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
இந்த தோ்வு மூலம் மொத்தம் 1,996 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வு மட்டும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியா் தோ்வை எழுத 4,454 போ் விண்ணப்பித்திருந்தனா். இத்தோ்வுக்காக 14 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தோ்வு மையங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே வந்து தோ்வு மையங்களில் தோ்வா்கள் குவிந்தனா்.
இந்த நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியா் தகுதித்தோ்வில் 4,149 போ் பங்கேற்று எழுதினா். இதில், 305 போ் பங்கேற்கவில்லை என அவா் தெரிவித்தாா்.