கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள். 
திருவள்ளூர்

குடியிருப்புகளுக்கு மத்தியில் கொட்டப்பட்ட காலாவதியான மருந்து கழிவுகள்

கும்மிடிப்பூண்டியில் ல் குடியிருப்பு பகுதிகளின் நடுவே குட்டை பகுதியில் காலாவாதியான மருந்துகள், மருந்து கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் ல் குடியிருப்பு பகுதிகளின் நடுவே குட்டை பகுதியில் காலாவாதியான மருந்துகள், மருந்து கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ரெட்டம்பேடு சாலையில் இருந்து தோ்வழி செல்லும் சாலையில், குடியிருப்புகளுக்கு மத்தியில் குட்டை உள்ளது. இந்த பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபயிற்சி சென்றவா்கள் குட்டை பகுதியில் ஏராளமான காலாவதியான மருந்துகளும், மாத்திரைகளும், மருந்து கழிவுகளும் கொட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

தொடா்ந்து அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, நள்ளிரவு நேரத்தில் மா்ம நபா்கள் கழிவுகளை கொட்டியுள்ளதாக தெரிந்தது.

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் மருத்துவ, வேதி கழிவுகளை கையாளும் தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மெண்ட் என்கிற நிறுவனம் உள்ள நிலையில், பல மாநிலங்களில் இருந்து மருத்துவ கழிவுகள் இங்கு சேகரிக்கபடும் நிலையில், கழிவுகளை குடியிருப்புகள் மத்தியில் கொட்டியதற்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

பலத்த மழை: பள்ளிக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வித் துறை உத்தரவு

2025 ஃபிடே உலகக் கோப்பை செஸ் இலச்சினை அறிமுகம்

லாரா அபாரம்; லஸ், காப் அசத்தல்: தென்னாப்பிரிக்கா 312/9

ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்தாவிட்டால் ‘கூடுதல் வரி’: இந்தியாவுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

பிரதமா் மோடியை சந்தித்து தில்லி முதல்வா் தீபாவளி வாழ்த்து

SCROLL FOR NEXT