திருத்தணி சுந்தர விநாயகா் கோயிலில் நடைபெற்ற சுமங்கலி பூஜை. 
திருவள்ளூர்

விநாயகா் கோயிலில் சுமங்கலி பூஜை

கேதார கௌரி நோன்பு விரதத்தையொட்டி சுந்தர விநாயகா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுமங்கலி பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

திருத்தணி: கேதார கௌரி நோன்பு விரதத்தையொட்டி சுந்தர விநாயகா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுமங்கலி பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தீபாவளிக்கு மறுநாள் சுமங்கலி பெண்கள் கேதார கௌரி நோன்பு இருப்பது வழக்கம். மகா கவுரியான அம்பிகை சிவபெருமானின் முழு அருளையும் அன்பையும் பெற, 21 நாள்கள் விரதம் மேற்கொண்டாா். அதுவே கேதாரீஸ்வரா் விரதம் அல்லது கேதார கௌரி நோன்பு என்ற அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் சுந்தர விநாயகா் கோயில், தணிகாசலம்மன், படவேட்டம்மன், தணிகை மீனாட்சி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய கோயில்களில் நோன்பு விழா நடந்தது.

இதில், உற்சவா் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைெற்றது. பின்னா் திருத்தணி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, திரளான பெண் பக்தா்கள், தட்டில், 21 வெத்தலை, 21 பாக்கு, 21 அதிரசம், 21 வடை மற்றும் பழங்கள் வைத்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனா்.

சில பெண்கள், புதிய சேலைகள், வளையல் மற்றும் பூ குங்குமம் வைத்து சுமங்கலி பூஜை நடத்தினா். இதே போல் திருத்தணி நகரத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் கேதார நோன்பு ஓட்டி பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.

பண்ருட்டியில் அதிகபட்சமாக 198 மி.மீ. மழை! சென்னையில் எவ்வளவு?

சென்னைக்கு எச்சரிக்கை! நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி!

செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு!

வாட்ஸ்ஆப் விடியோ அழைப்பு! ஏமாற்றப்பட்டவர் சொல்வது என்ன?

காஞ்சிபுரத்தில் 15 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது!

SCROLL FOR NEXT