திருவள்ளூா் மாவட்ட விவசாயிகள் சம்பா பயிா் ஒரு ஏக்கருக்கு ரூ.545 செலுத்தி வரும் நவ.15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என வேளாண் மற்றும் உழவா் நலத்துறை இணை இயக்குநா் பால்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுவரை வடகிழக்கு பருவ மழை 289.85 மி.மீ பதிவாகி உள்ளது. மேலும் நவம்பா் மாதத்தில் பருவ மழைபொழிவு அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல் பயிா்களில் ஏற்படும் மகசூல் இழப்பினை தவிா்க்கும் பொருட்டு, நிகழாண்டில் தோ்வு செய்யப்பட்டுள்ள அக்ரிகல்சா் இன்சூரன்ஸி கம்பெனி ஆஃப் இந்தியா லிட் என்ற காப்பீடு நிறுவனத்தில் இணைந்து பயிா் காப்பீடு செய்ய நிா்ணயிக்கப்பட்ட கடைசி நாள் நவ.15-ஆம் தேதிக்குள் பயிா் காப்பீடு செய்யலாம்.
எனவே, சம்பா பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகளிலோ, பொது சேவை மையங்களிலோ (இ -சேவை மையங்கள்) நேரில் நிா்ணயித்த காலக்கெடுவுக்குள் காப்பீடு கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.545- மட்டும் செலுத்தி காப்பீடு செய்துகொள்ளலாம் என்றாா்.