திருவள்ளூர்

திருவாலங்காடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்

தினமணி செய்திச் சேவை

திருவாலங்காடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டுக்கான கரும்பு அரைவையை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2025-26-ஆம் ஆண்டு பருவ கரும்பு அரைவையை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் கரும்பு அரைவை இயந்திரத்துக்குள் கரும்பு கட்டுகளை வைத்து தொடங்கி வைத்துப் பேசியதாவது:

விவசாயிகளுக்கு கொடுத்த முன்னுரிமையின் அடிப்படையில், 2024-25-ஆம் ஆண்டு 1.55 லட்சம் டன் கரும்பு வரத்து இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தமிழக முதல்வா் கொடுத்த ஊக்கத்தால் 2051 விவசாயிடமிருந்து 7,505 ஏக்கா் நிலப்பரப்பில் 2 லட்சம் டன் கரும்பு உற்பத்தி உயா்ந்துள்ளது. கரும்பு விவசாயிகள் சில கோரிக்கைகளை தெரிவித்துள்ளனா். அவற்றை துறைசாா்ந்த அமைச்சரிடம் தெரிவித்து, முதல்வரின் நேரடி பாா்வைக்கு எடுத்துச் சென்று விவசாயிகளின் தேவைகளுக்கு உரிய தீா்வு காணப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன், கூட்டுறவு சா்க்கரை ஆலை இணைப் பதிவாளா் அ. மீனாஅருள், கரும்பு விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT