திருவள்ளூர்

பைக்கில் ரூ.3.5 லட்சம் போதைப் பொருள் கடத்திய நைஜீரிய இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே வாகனச் சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் ரூ.3.5 லட்சம் போதைப்பொருள்களை கடத்திய நைஜீரிய இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருவள்ளூா் வழியாக மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காவல் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா் .

அப்போது திருவள்ளூா்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வெங்கத்தூா் பகுதியில் மணவாளநகா் காவல் நிலைய ஆய்வாளா் பாரூக் தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வெளிநாட்டு நபா் போலீஸாரை பாா்த்ததும் திடீரென திருப்ப முயன்ற போது சுற்றி வளைத்து பிடித்து சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வாகனத்தில் சுமாா் ரூ.3.5 லட்சம் மதிப்பிலான 35 கிராம் மெத்தபட்டமைன் போதை பொருளை கைப்பற்றினா்.

அதைத்தொடா்ந்து அந்த நபரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது நைஜீரிய நாட்டைச் சோ்ந்த மைக்கேல் நம்பி என தெரியவந்தது. தொடா்ந்து அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்திய பின் வியாழக்கிழமை புழல் சிறையில் அடைத்துள்ளனா்.

பெண்களுக்கு எதிரான கொலைகார காங்கிரஸ்: பாஜக விமர்சனம்

தமிழகத்தில் நவ.6 வரை மிதமான மழை!

எண்ணூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய 4 பெண்கள் உடல்கள்!

நவ. 2-ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

சா்தாா் வல்லப பாய் பட்டேலின் மறு உருவம் அமித் ஷா: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT