பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் மு.பிரதாப். 
திருவள்ளூர்

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 437 மனுக்கள்

திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 437 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 437 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். இதில் மொத்தம் 437 கோரிக்கை மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். தேசிய அறக்கட்டளை மூலமாக 8 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டபூா்வ பாதுகாவலா் சான்றுகளையும் அவா் வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையா் கலால் கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் கனிமொழி, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷாராணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் மற்றும் பலா் பங்கேற்றனா்.

உலக நீரிழிவு தினம்: வேலூரில் செப். 27-இல் சமையல் போட்டி

அமுல் தயாரிப்புகளின் விலை குறைப்பு

நவரத்தின, ஆபரணக் கண்காட்சியில் விற்பனை புதிய உச்சம்

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் 13 மாதங்கள் காணாத வளா்ச்சி!

காஸா சிட்டி மருத்துமனையையும் காலி செய்ய இஸ்ரேல் உத்தரவு

SCROLL FOR NEXT