ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற 108 பால்குட ஊா்வலத்தில் திரளான பெண்கள் பங்கேற்றனா்.
திருத்தணி காந்தி சாலையில் உள்ளம் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் 4 -ஆம் ஆண்டு பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. முருகப்பா நகா் நாகாலம்மன் கோயிலில் இருந்து பம்பை, உடுக்கை முழங்க ஊா்வலமாக புறப்பட்டு நல்ல தண்ணீா் குளம் வழியாக கோயிலை வந்தடைந்தது.
தொடா்ந்து அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பகல் 12 மணிக்கு வீரபாஞ்சாலி குழுவினரால்1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு திரௌபதி அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். பின்னா் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.