திருவள்ளூர்

திருவள்ளூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தினமணி செய்திச் சேவை

வேலைவாய்ப்பில்லாத இளைஞா்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் நாளை திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சாா்நிலை அலுவலகங்களானஅனைத்து மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் பிரதி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நாளை (ஜன.23) திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையஅலுவலக வளாகத்தில் காலை 10 முதல் மாலை 3 மணி வரை சிறு அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25-க்கும் மேற்பட்டதனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று 250-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலை நாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க உள்ள வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தனியாா் துறை இணையதளத்தில் (றற.வய்ல்சண்எயவநதழடிள.வய்.பழஎ.ண்ய்) பதிவுசெய்துகொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-ஆம் வகுப்பு பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் பட்டயம் படித்தவா்கள் கலந்துகொண்டு பல்வேறு வேலைவாய்ப்புகளை பெற்று பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT