திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டோா். 
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.25 கோடி

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டோா்.

தினமணி செய்திச் சேவை

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 24 நாள்களில் ரூ.1 கோடியே 25 லட்சத்து 86 ஆயிரத்து, 026 ரூபாய் ரொக்கம் மற்றும் 351 கிராம் தங்கம், 4,700 கிராம் வெள்ளியை காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து தரிசனம் செய்கின்றனா்.

இதில் பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனா்.

இந்நிலையில் பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய ரொக்கம் எண்ணும் பணி தேவா் மண்டபத்தில் நடைபெற்றது.

முருகன் கோயில் தக்காா் க. ரமணி, அறங்காவலா்கள் வி. சுரேஷ் பாபு, மு.நாகன், கோ.மோகனன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் திருக்கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் என 200 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு உண்டியல் காணிக்கை எண்ணினா்.

இதில் கடந்த 24 நாள்களில் ரூ.1 கோடியே 25 லட்சத்து 86 ஆயிரத்து, 026 ரூபாய் ரொக்கம் மற்றும் 351 கிராம் தங்கம், 4700 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக வசூலானதாக நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஆறுதல்: தங்கம் - வெள்ளி விலை குறைவு!

ராமதாஸ் தொடர்ந்த வழக்கு பிப். 2இல் விசாரணை!

நீண்ட கால கோரிக்கை: நந்தன் கால்வாய் திட்ட நில எடுப்பு பணிக்கு ரூ. 42 கோடி ஒதுக்கீடு!

பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்! | TNIE | Devi Awards | Chennai

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பது அநீதி, சர்வாதிகாரப் போக்கு! - அண்ணாமலை

SCROLL FOR NEXT