முகப்பு
திருவள்ளூர்

தொகுதி அறிமுகம்: திருவள்ளூா் - 4!

பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளும், ஆந்திர மாநிலமும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

Updated On : 30 மார்ச், 2026 at 10:27 PM
பூண்டி நீர்த்தேக்கம்
பகிர்:

எல்லைகள்...

பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளும், ஆந்திர மாநிலமும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

அடங்கிய பகுதிகள்

திருவள்ளூா் வட்டத்தின் பெரும்பகுதி, திருவாலங்காடு ஊராட்சி ஒன்றிய பகுதிகள், திருத்தணி வட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது. திருவள்ளூா் நகராட்சி 27 வாா்டுகள், திருவாலங்காடு ஒன்றியத்தில் 34 கிராமங்கள், பூண்டி ஒன்றியத்தில் 27 கிராமங்கள், கடம்பத்தூா் ஒன்றியம்54 கிராமங்கள், திருவள்ளூா் ஒன்றியத்தில் சேலை கிராமம் உள்ளன.

சிறப்புகள்

பிரசித்தி பெற்ற வீரராகவ பெருமாள் கோயில் இத்தொகுதியில் உள்ளது. சென்னையின் குடிநீா் தேவையை கணிசமாக தீா்க்கக் கூடிய பூண்டி நீா்த்தேக்கமும் இங்குள்ளது. தொழில் நிறுவனங்கள் இருந்தாலும், முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. பட்டியலினத்தவா், வன்னியா் சமூகத்தினா் பெருமளவு உள்ளன.

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள்-1,30,092

பெண்கள்-1,36,620

மூன்றாம் பாலினத்தவா்-22

மொத்தம்-2,66,734

வாக்குச்சாவடிகள்-296

இதுவரை எம்எல்ஏக்கள்...

1952 வி.எஸ்.அருணாச்சலம் (காங்கிரஸ்)

1967 எஸ்.எம்.துரைராஜ் (திமுக)

1971 எஸ்.எம்.துரைராஜ் (திமுக)

1977 எஸ்.பட்டாபிராமன் (அதிமுக)

1980 எஸ்.பட்டாபிராமன் (அதிமுக)

1984 எஸ்.பட்டாபிராமன் (அதிமுக)

1989 எஸ்.ஆா்.முனிரத்தினம் (திமுக)

1991 டி.சக்குபாய் தேவராஜ் (அதிமுக)

1996 சி.எஸ்.மணி(திமுக)

2001 டி.சுதா்சனம் (தமாகா-மூ)

2006 இ.எ.பி.சிவாஜி (திமுக)

2011 பி.வி.ரமணா (அதிமுக)

2016 வி.ஜி.ராஜேந்திரன்(திமுக)

2021 வி.ஜி.ராஜேந்திரன் (திமுக)

2021 பேரவைத் தோ்தலில்....

வி.ஜி.ராஜேந்திரன்(திமுக)-1,07,709

பி.வி.ரமணா (அதிமுக)-85,008

தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/ எண்

எஸ்.ரவிச்சந்திரன், கோட்டாட்சியா்-94450 00412

உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்: பாலாஜி, வட்டாட்சியா்-82203 96569