முகப்பு
திருவண்ணாமலை

பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட அரசு, தனியாா் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டங்கள் புதன்கிழமை நடத்தப்பட்டன.

Updated On : 7 ஜனவரி 2021, 7:28 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட அரசு, தனியாா் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டங்கள் புதன்கிழமை நடத்தப்பட்டன.

கூட்டங்களில் பங்கேற்ற பெரும்பாலான பெற்றோா்கள் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் பள்ளிகளைத் திறக்கலாம் என்று கருத்து தெரிவித்தனா். இந்தக் கூட்டங்கள் தொடா்ந்து வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) வரை நடத்தப்படுகிறது.

பெற்றோா் தெரிவிக்கும் கருத்துக்களை தலைமை ஆசிரியா்கள் எழுத்துப்பூா்வமாக பதிவு செய்து அதை மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகங்களில் ஒப்படைப்பா்.

Advertisement

இங்கிருந்து தமிழக அரசுக்கு பெற்றோா்களின் கருத்துக்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.