வணிகம்

தங்கம் விலை தொடர் சரிவு: ஒரு பவுன் ரூ.21,552-ஆக குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த 9 நாள்களுக்குள் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,232 குறைந்திருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த 9 நாள்களுக்குள் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,232 குறைந்திருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச அளவில் தங்கம் விலை சரிவடைந்து வருகிறது. கடந்த வாரம் 1385 டாலர்களாக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம், தற்போது 1300 டாலர்களுக்கும் கீழே சென்றுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் முன்னேற்றம் காணப்படுகிறது.

இதைத் தவிர தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், நாட்டில் பணப்புழக்கம் குறைந்து, ஆபரணங்களின் விற்பனையும் சரிவடைந்து வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாகவே இந்திய சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.

சென்னையில் வியாழக்கிழமை, தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.336 குறைந்து, ரூ.21 ஆயிரத்து 552-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தின் விலை குறைந்ததன் தாக்கமாக வெள்ளி விலையும் சரிவடைந்துள்ளது. சென்னையில் கட்டி வெள்ளி, கிலோவுக்கு ரூ.910 குறைந்து வியாழக்கிழமை ரூ.42 ஆயிரத்து 670-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வியாழக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):- ஆபரணத் தங்கம்

ஒரு கிராம்2,694

ஒரு பவுன்21,552

ஒரு கிராம் வெள்ளி45.70

ஒரு கிலோ கட்டி வெள்ளி42,670

புதன்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):- ஆபரணத் தங்கம்

ஒரு கிராம்2,736

ஒரு பவுன்21,888

ஒரு கிராம் வெள்ளி46.60

ஒரு கிலோ கட்டி வெள்ளி43,580

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT