முகப்பு
வணிகம்

தந்தேராஸ் அன்று கார் விற்பனையில் சாதனை செய்த மாருதி, ஹூண்டாய்!

மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் தந்தேராஸ் தினத்தன்று விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 10:29 AM
பகிர்:

மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் தந்தேராஸ் தினத்தன்று விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

30000 கார்களை விற்று மாருதி நிறுவனமும், 15153 கார்களை விற்று ஹூண்டாய் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுத்துள்ளன.

மாருதி நிறுவனத்தின் பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன் வரும் தந்தேராஸ் சுப தினத்தில் வாகனம் வாங்குவது நல்லது என்று வட இந்தியர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் முன்பே பதிவு செய்து காத்திருந்தனர். தந்திராஸ் தினத்தையொட்டி அனைத்து கார்களும் டெலிவிரி கொடுக்ப்பட்டன. கார் மார்க்கெட் விற்பனையில் இது ஒரு புதிய சாதனை. இது முந்தை ஆண்டை விட மாருதி நிறுவனத்திற்கு 20% அதிக விற்பனை ஆகும். ஹூண்டாய் நிறுவனமும் 26% அதிக விற்பனை செய்து இருக்கிறது.

இந்த மாதத்தில் கார் மற்றும் இரு சக்கர விற்பனையில் இந்த ஆண்டின் அதிகபட்ச அளவை இரு பிரிவுகளும் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →