வணிகம்

மீண்டும் புதிய உச்சம் தொட்டது பங்கு சந்தை

முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டன.

தினமணி

முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டன.
 விடுமுறை காலம் என்பதால் தொடக்கத்தில் மிக மந்தமாகத் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சுறுசுறுப்படைந்தது.
 தொலைத் தொடர்பு, மருந்துப் பொருள்கள், உலோகத் துறைகள் மீது முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
 நடுத்தர மற்றும் சிறிய வகை நிறுவனங்களின் பங்குகள் சுறுசுறுப்பாக விற்பனையாகின.
 நம்பகத்தன்மை அதிகம் கொண்ட பாரதி ஏர்டெல், சன் ஃபார்மா, யெஸ் வங்கி போன்ற நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் 2.59 சதவீதம் அதிகரித்தன.
 கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான புதிய திட்டத்தை அறிவித்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலைகள், மளமளவென 30.78 சதவீதம் அதிகரித்தது.
 அந்தக் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் விலை 1.03 சதவீதமும், ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனப் பங்குகளின் விலை 7.02 சதவீதமும் உயர்ந்தன.
 ரிலையன்ஸ் பவர் நிறுவனப் பங்குகள் 3.85 சதவீதம் அதிக விலைக்கு விற்கப்பட்டன.
 தொலைத் தொடர்பு, மனை வர்த்தகம், உலோகத் துறை, மருத்துவத் துறை நிறுவனங்களின் பங்குகள் 2.28 சதவீதம் வரை அதிகம் விலை போயின.
 மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 70 புள்ளிகள் (0.21 சதவீதம்) அதிகரித்து 34,010 புள்ளிகள் என்ற புதிய உயரத்தைத் தொட்டது.
 கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 33,940 புள்ளிகள் அதிகரித்ததே இதுவரை சாதனை அளவாக கருதப்பட்டது.
 தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 38.5 புள்ளிகள் (0.37%) உயர்ந்து, புதிய உச்சமாக 10,531 புள்ளிகளைத் தொட்டது. இதற்கு முன்பு, கடந்த வெள்ளிக்கிழமை நிஃப்டி 10,493 புள்ளிகளைத் தொட்டதே சாதனை அளவாக இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT