வணிகம்

புதிய உச்சத்தில் பங்குச் சந்தை

சாதகமான நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்தது.

DIN

சாதகமான நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்தது.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை தற்போதைக்கு உயர்த்த வாய்ப்பில்லை என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்பட்டது. அதன் காரணமாக, பங்கு முன்பேர வணிக கணக்கு முடிப்பு தினத்திலும் பங்குச் சந்தையில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
பொறியியல் துறை நிறுவனப் பங்குகளின் விலை சராசரியாக 3.52% அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து வங்கி 2.82%, தகவல் தொழில்நுட்பம் 2.32% பங்குகளின் விலையும் கணிசமாக உயர்ந்தது.
வோல்டாஸ் நிதி நிலை முடிவு சந்தை எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இருந்ததால் அதன் நிறுவன பங்கின் விலை 6.25% அதிகரித்தது. எல் & டி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.டிஎஃப்.சி. வங்கி, இன்போசிஸ் பங்குகளுக்கும் சந்தையில் வரவேற்பு அதிகமாக இருந்தது.
அதேசமயம், லூபின் நிறுவனப் பங்கின் விலை 7.31% வீழ்ச்சியடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 448 புள்ளிகள் ஏற்றம் கண்டு 30,750 புள்ளிகளாக நிலைத்து புதிய உச்சத்தை எட்டியது. கடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு சென்செக்ஸ் ஒரே நாளில் இந்த அளவுக்கு அதிகரிப்பது இதுவே முதல்முறை.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 149 புள்ளிகள் உயர்ந்து 9,509 புள்ளிகளாக நிலைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு! நடிகை தரப்பு

மியான்மரைத் தாக்கிய நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

பங்குச்சந்தை: 300 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்! ஐடி பங்குகள் உயர்வு!

கோவையில் ஓ.பன்னீர்செல்வம் - அண்ணாமலை திடீர் சந்திப்பு

காவலரைக் கடித்த தவெக தொண்டர் கைது!

SCROLL FOR NEXT