வணிகம்

5ஜி சேவையில் களமிறங்கியது ரிலையன்ஸ் ஜியோ

5ஜி சேவையை தொடங்கும் நோக்கத்துடன் ரேடிஸிஸ் கார்பரேஷன் தொலைதொடர்பு தொழில்நுட்ப சேவை நிறுவனத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாங்கியது.

DIN

5ஜி சேவையை தொடங்கும் நோக்கத்துடன் ரேடிஸிஸ் கார்பரேஷன் தொலைதொடர்பு தொழில்நுட்ப சேவை நிறுவனத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாங்கியது.

இந்திய தொலைதொடர்புத் துறை நிறுவனங்களில் முதன்முறையாக 4ஜி சேவையை மலிவு விலையில் அறிமுகப்படுத்தி அதன்மூலம் மாபெரும் வாடிக்கையாளர்களை கவர்ந்தது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். மேலும் இந்தியாவின் பிரதான வாடிக்கையாளர்களைக் கொண்ட தொலைதொடர்புத்துறை சேவை நிறுவனமாகவும் மிகவும் குறுகிய காலத்தில் உருவெடுத்தது.

இந்நிலையில், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அடுத்து 5ஜி சேவையை விரைவில் இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை ஜியோ நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், சர்வதேச தொலைதொடர்புத்துறை தொழில்நுட்ப சேவை நிறுவனமான ரேடிஸிஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளை 75 மில்லியன் டாலர்கள் (ரூ.510 கோடி) மதிப்பில் வாங்கியுள்ளது.

இதில் அந்நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கின் மதிப்பையும் 1.72 டாலர்கள் என்ற மதிப்பில் ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது. இதனால் ரிலையன்ஸ் ஜியோ-வின் வளர்ச்சி மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த புதிய நடைமுறையின் அடிப்படையில் 5ஜி சேவையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உலகளவில் புதிய தொழில்நுட்ப மைல்கல்லை எட்டியுள்ளதாக அதன் தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயறுவகை, எண்ணெய் வித்து பயிா்களை விதைக்க அழைப்பு

வேலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அளிப்பு

மனநலம் குன்றிய சத்தீஸ்கா் இளைஞரை குணப்படுத்தி தாயிடம் ஒப்படைப்பு

திருமண நகைகள் திருட்டு - சிஆா்பிஎஃப் பெண் காவலா் விடியோவால் சா்ச்சை

அரசுப் பள்ளி மாணவா்கள் புத்தகப்பைகளை மைதானத்தில் வைத்து நூதன போராட்டம்

SCROLL FOR NEXT