ஆன்லைனில் பொருள்கள் வாங்குவதை எளிதாக்குகிறது ஜூடன் (Zoutons) குரோம் நீட்டிப்பு!
ஜூடன் என்பது கூப்பன்களைப் பற்றி கூறும் இணைய தள சேவை நிறுவனம். இதன்மூலம் எல்லா கடை மற்றும் நிறுவனங்களில் தரும் சிறந்த தள்ளுபடிகளை அறிய இயலும்.
தாங்கள் குரோம் பிரெளசர் பயன்படுத்துபவரா? தினமும் வாங்கும் பொருட்களில் பணம் மிச்சப்படுத்த நினைப்பவரா? ஆனால் சரியான கூப்பன்களும், ஒப்பந்தங்களும் கிடைக்காமல் திணறுபவரா? இப்பிரச்னைக்கான பதில் ஜூடன் (Zoutons) குரோம் நீட்டிப்பு என்ற ஒன்றுதான். ஜூடன் என்பது இணையதளத்தில் சிறந்த கூப்பன்களை சுலபமாகவும் எளிதாகவும் கண்டுபிடிக்க உதவுகின்றது. முன்பு இவர்கள் இணையதளம் மற்றும் ஆப் (app) மூலம் இதை செய்து வந்தனர். தற்பொழுது ஒரு குரோம் நீட்டிப்பை கொண்டுவந்துள்ளனர்.
குரோம் நீட்டிப்பு காரணமாக நம்மால் வேகமாக இணையதளத்தை உபயோகிக்க முடியும். ஜூடன் மூலம் 150-க்கும் மேற்பட்ட கடைகளின் கூப்பன்களை நம்மால் பெற முடியும். இதில் சிறந்தது எது என்பதை நம்மால் மட்டும் தனியாக கண்டுபிடிக்க முடியாது. இதற்குத்தான் நாம் ஜூடன் குரோம் நீட்டிப்பை உபயோகிக்க வேண்டும். இதன்மூலம் சிறந்த தள்ளுபடிகளை சுலபமாக கண்டுகொள்ளலாம்.
ஜூடன் பற்றி
ஜூடன் என்பது கூப்பன்களைப் பற்றி கூறும் இணைய தள சேவை நிறுவனம். இதன்மூலம் எல்லா கடை மற்றும் நிறுவனங்களில் தரும் சிறந்த தள்ளுபடிகளை அறிய இயலும். இதன்மூலம் உணவு ஆர்டர் செய்ய, டாக்ஸி புக் செய்ய, மொபைல் ரீசார்ஜ் செய்ய, பொருட்கள் வாங்க என அனைத்து செயல்களுக்கும் சிறந்த ஒப்பந்தம் பெறலாம். இச் சேவை 2013-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- தேவைப்பட்ட வகையையோ அல்லது பொருளையோ நீங்கள் இதிலிருந்து தேடலாம். ஜூடன் ஆப் தற்பொழுது வரை உபயோகித்து வந்தவர்கள் இனி ஜூடன் குரோம் நீட்டிப்பை பயன்படுத்தலாம்.
குரோம் நீட்டிப்பு என்றால் என்ன?
நாம் அனைவரும் இணையதளம் பயன்படுத்த குரோம் பயன்படுத்துகின்றோம். குரோம் நீட்டிப்பு என்பது ஒரு மென்பொருள் நிரலாகும். தாம் இணையதளத்தை உபயோகிக்கும் விதத்துக்கு ஏற்ப இது செயல்படும். ஜூடன் குரோம் நீட்டிப்பை நாம் பதிவிறக்கம் செய்தவுடன், அதுவே சிறந்த தள்ளுபடிகளை நமக்கு காண்பிக்கும்.
இந்த குரோம் நீட்டிப்பின் காரணமே, நாம் நமக்கு தெரிந்ததை மட்டும் வாங்காமல் சிறந்ததை வாங்க வேண்டும் என்பதே. நம்மில் பல பேருக்கு இணயதளத்தில் குறைந்த விலையில் பொருட்கள் வாங்க தெரியாது. இச் சேவை மூலம் நாம் இதை சுலபமாக செய்யலாம். இதன் சிறப்பம்சமே இதன் அளவு மிகச் சிறியதாக வெறும் 477 கிலோபைட்ஸ் மட்டுமே.
குரோம் நீட்டிப்பின் வேலைப்பாடு
தாங்கள் இதை பயன்படுத்துவதனால் எவ்வித பாதிப்பும் வராது. இதை நீங்கள் பதிவிறக்கம் செய்துவிட்டு, வழக்கம் போல இணையதளத்தை பயன்படுத்தலாம். தாங்கள் ஏதேனும் ஒரு இணையதள அங்காடிக்கு சென்று பொருள் வாங்கினால், அதற்கு ஏற்ற கூப்பன்களை தானாகவே இது பயன்படுத்தும். இதன் மூலம் தங்களது நேரம், பணம் ஆகிய இரண்டையும் மிச்சப்படுத்தலாம்.
ஜூடன் குரோம் நீட்டிப்பை ஏன் உபயோகிக்க வேண்டும்?
தாம் இதை உபயோகிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவெடுப்பதற்கு முன்பு, ஜூடன் குரோம் நீட்டிப்பின் பயன்களை அறிந்துகொள்ளுங்கள்.
- நேரத்தை மிச்சப்படுத்தும் - சரியான கூப்பனை தேடுவது என்பது எளிதான காரியம் அல்ல. பல இணையதள முகவரிகளை பார்த்து, அதில் சிறந்த கூப்பன்களை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இந்நீட்டிப்பின் மூலம் இவை அனைத்தும் சுலபமாக முடியும்.
- சிறந்த சலுகைகளை தேர்ந்தெடுக்கும் - தற்பொழுது வரை நூற்றுக்கும் மேற்பட்ட சலுகைகளில் எது சிறந்தது என்பதை நாமே ஆராய வேண்டும். ஆனால் இதன் உதவி மூலம் சரியான சலுகைகள் தாமே நம்மை வந்தடையும்.
- புதிய சலுகைகள் புது வடிவில் - நாம் அனைவரும் கூப்பன்களை பயன்படுத்த ஆர்வத்துடன் உள்ளோம். ஆனால் புதியது எது பழையது எது என்பதை ஆராய்ந்து பார்க்க நேரம் இல்லை. ஜூடன் நீட்டிப்பின் மூலம் நாம் புதிய இணையதள முகவரியை ஆராம்பிக்கும் பொழுதே புதிய கூப்பன்களை காண்பிக்கும்.
- விற்பனைக்கு வந்தவுடன் இங்கு - சில சமயங்களில் நாம் புதிய வரவை எதிர்பார்த்து சிறந்த பொருட்களை விட்டு விடுவோம். ஆனால் இனிமேல் அவ்வாறு விடாமல் புதிய சலுகைகள் வந்தவுடன் நமக்கு தெரிந்துவிடும்.
- 400-க்கும் மேற்பட்ட கடைகள் - இதன்மூலம் ஒரு சில கடைகளிலிருந்து பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படவில்லை. 400-க்கும் மேற்பட்ட கடைகளிலிருக்கும் சிறந்த சலுகைகள் இங்கு காண்பிக்கப்படுகின்றன. இணையதளத்தில் குரோமை திறந்தால் போதும்.
- அதிக பணம் சேமிப்பு - இதன் பயன்பாட்டால் கிடைக்கும் மிகச் சிறந்த சேவை அதிக பண சேமிப்புதான். அதுவும் எவ்வித செலவுமின்றி பணத்தை சேமிக்கலாம்.
ஜூடன் குரோம் நீட்டிப்பு பெற வழி
- குரோம் இணையதளத்தில் ‘குரோம் வெப் ஸ்டோர்’ என்பதை திறக்கவும்.
- அதில் ஜூடன் பற்றி மேலே இடது முனையில் தேடவும்.
- ஜூடன் கூப்பன் ஃபைண்டர் என்ற நீட்டிப்பை காண முடியும்.
- அதை திறந்து பதிவிறக்கம் செய்யவும்.
- இதற்கான அனுமதியை தாம் வழங்க வேண்டும்.
- இவை அனைத்தையும் வெற்றிகரமாக முடித்துவுடன் குரோம் நீட்டிப்பு சேர்க்கப்பட்டு விடும்.
இவை அனைத்தையும் செய்து முடிக்க சிறிது நேரமே தேவைப்படும். ஆகவே விரைவாக இன்றே ஜூடன் குரோம் நீட்டிப்பை சேர்த்து இணையதளத்தில் குதூகலமாக புதிய சலுகைகளுடன் பொருள்களை வாங்கி மகிழுங்கள்.