டிடிகே பிரஸ்டீஜின் நிகர லாபம் ரூ.37.44 கோடி
சமையலறைப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான டிடிகே பிரஸ்டீஜ், கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ.37.44 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சமையலறைப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான டிடிகே பிரஸ்டீஜ், கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ.37.44 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மும்பை பங்குச் சந்தையிடம் அந்த நிறுவனம் சமர்ப்பித்துள்ள நிதி நிலையறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்த நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.37.44 கோடியாக இருந்தது. அதற்கு முந்தைய நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிகர லாபம் ரூ.55.35 ஆக இருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிகர லாபம் 32.35 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
முந்தைய நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டு நிகர லாபத்தில் எக்ûஸஸ் வரிகள் சேர்க்கப்படவில்லை. ஆனால், கடந்த நிதியாண்டின் இந்த கால அளவு நிகர லாபத்தில் எக்ûஸஸ் வரிகள் கழிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த இரு நிகர லாபங்களையும் முழுமையாக ஒப்பிட முடியாது என்று டிடிகே பிரஸ்டீஜ் தெரிவித்துள்ளது.