வணிகம்

செயில் நிகர லாபம் 81 சதவீதம் சரிவு

செயில் எனப்படும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் முதல் காலாண்டில் 81 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

DIN

செயில் எனப்படும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் முதல் காலாண்டில் 81 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செபியிடம் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் செயில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ரூ.14,820.89 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டி வருவாயான ரூ.15,907.53 கோடியுடன் ஒப்பிடும்போது இது குறைவானதாகும்.
வருமானம் குறைந்து போனதையடுத்து நிகர லாபம் ரூ.551.96 கோடியிலிருந்து 81 சதவீத சரிவைக் கண்டு ரூ.102.68 கோடியாகி உள்ளது.  கச்சா உருக்கு உற்பத்தி 49.45 லட்சம் டன்னிலிருந்து  39.30 லட்சம் டன்னாக குறைந்தது என செயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிதி நிலை முடிவுகள் குறித்து செயில் நிறுவன தலைவர் அனில் குமார் தனியாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு உருக்குத் துறையில் தேவை மந்த நிலையிலேயே உள்ளது. இருப்பினும், உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட உருக்கு பயன்பாடு அதிகம் உள்ள துறைகளில் அதிக அளவில் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டி எஞ்சிய நாள்களில் உருக்கு துறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம் என்று அந்த அறிக்கையில் அனில் குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூளை சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

குற்றாலத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல்!

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு! ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்!

வக்ஃப் வாரியத் தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT