வணிகம்

22 மணி நேரம் பேட்டரி தாங்கும் ஹெச்பி நிறுவனத்தின் புதிய ஸ்பெக்டர் சாதனம்!

DIN


கணினி, லேப்டாப் போன்றவற்றை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான ஹெச்பி, உலகின் மிகச் சிறிய கன்வெர்டிபில் ஸ்பெக்டர் லேப்டாப் சாதனத்தை கடந்த வியாழக்கிழமை அறிமுகம் செய்தது. 10-வது தலைமுறை இன்டெல் பிராசஸரைக் கொண்டுள்ள இந்த சாதனம் 22 மணி நேரம் பேட்டரியை தாக்குப்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 1.27 கிலோ ஆகும். 

இது ஹெச்பி வெப்கேம் கில் ஸ்விட்ச்சை வழங்குகிறது. இது வெப்கேம் ஹேக்கிங் மூலம் ஹேக் செய்வதில் இருந்து பயன்பாட்டாளர்களைப் பாதுகாப்பாக வைக்கும். வெப்கேம் பயன்பாட்டில் இல்லாத சமயத்திலும் தாமாக ஆஃப் ஆவதற்கான தொழில்நுட்பமும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் விலை ரூ. 99,990-இல் இருந்து ஆரம்பமாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

யூடிஎஸ் செயலி பிரசாரக் குழுவுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT