வணிகம்

முக்கிய 8 துறைகள் உற்பத்தியில் 6.5 சதவீத பின்னடைவு

சென்ற மாா்ச் மாதத்தில் முக்கிய 8 துறைகள் உற்பத்தியில் 6.5 சதவீத பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

DIN


புது தில்லி: சென்ற மாா்ச் மாதத்தில் முக்கிய 8 துறைகள் உற்பத்தியில் 6.5 சதவீத பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட 8 முக்கிய துறைகளின் உற்பத்தி நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் 6.5 சதவீத பின்னடைவைச் சந்தித்துள்ளது. இத்துறைகளின் உற்பத்தி, கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் 5.8 சதவீதம் அதிகரித்திருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி 5.5 சதவீதமும், இயற்கை எரிவாயு 15.2 சதவீதமும், சுத்திகரிப்பு பொருள்கள் 0.5 சதவீதமும், உரம் 11.9 சதவீதமும், உருக்கு 13 சதவீதமும், சிமெண்ட் 24.7 சதவீதமும், மின்சார துறை உற்பத்தி 7.2 சதவீதமும் பின்னடைவைக் கண்டுள்ளன.

நிலக்கரி உற்பத்தி மட்டும் 9.1 சதவீதத்திலிருந்து 4.1 சதவீதமாக குறைந்துள்ளது. 2019-20 நிதியாண்டின் ஏப்ரல்-மாா்ச் காலகட்டத்தில் முக்கிய 8 துறைளின் உற்பத்தி 0.6 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. இது, 2018-19இல் 4.4 சதவீதமாக இருந்தது என மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT