வணிகம்

சோழமண்டலம் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் நிகர லாபம் ரூ.589 கோடி

சோழமண்டலம் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் (சிஎஃப்எச்எல்) நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.589 கோடி வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

DIN

சோழமண்டலம் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் (சிஎஃப்எச்எல்) நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.589 கோடி வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருமானம் ரூ. 3,234 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.3,123 கோடியாக காணப்பட்டது. கணக்கீட்டு காலாண்டில் நிறுவனம் ஈட்டி லாபம் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.330 கோடியிலிருந்து ரூ.589 கோடியாக அதிகரித்தது. தனிப்பட்ட முறையில் நடப்பு நிதியாண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வரிக்கு பிந்தைய காலகட்டத்தில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.3.36 கோடியாக இருந்தது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் ரூ.2.56 கோடி நிகர லாபத்தை பதிவு செய்திருந்தது என சோழமண்டலம் பைனான்ஸியல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT