இரண்டு புதிய வானொலி நிலையங்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம்!
ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய நேரலை வானொலி நிலையங்களை அறிமுகப்படுத்துகிறது.
ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய நேரலை வானொலி நிலையங்களை அறிமுகப்படுத்துகிறது.
முன்னதாக, ஆப்பிள் நிறுவனத்தின் 'பீட்ஸ் 1' என்ற உலகளாவிய வானொலி நிலையம் 'ஆப்பிள் மியூசிக் 1' என பெயர் மாற்றப்படுகிறது. இதுதவிர ஆப்பிள் நிறுவனம், 'ஆப்பிள் மியூசிக் ஹிட்ஸ்', 'ஆப்பிள் மியூசிக் கண்ட்ரி' என இரண்டு நேரலை வானொலி நிலையங்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியா உள்பட 165 நாடுகளில் இது அறிமுகமாக உள்ளது.
இதில், ஆப்பிள் மியூசிக் ஹிட்ஸ் என்பது 1980, 1990, 2000-களில் இருந்து அனைவருக்கும் பிடித்த பாடல்களை ஒலிபரப்பும். ஆப்பிள் மியூசிக் கன்ட்ரி என்பது அந்தந்த நாடுகளைப் பொறுத்து நாட்டுப்புற இசையை வழங்கும்.
மேலும், கலைஞர்களுக்கு அவர்களின் ரசிகர்களுடன் பேசவும், இசையைப் பகிர்ந்து கொள்ளவும் இணையற்ற உலகளாவிய தளத்தை வழங்குகிறது.
இது ஒரு ஆரம்பம் மட்டுமே, நாங்கள் தொடர்ந்து நேரலை வானொலியில் முதலீடு செய்வோம், உலகெங்கிலும் உள்ள மக்கள், அவர்கள் விரும்பும் இசையுடன் இணைவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று ஆப்பிள் மியூசிக், பீட்ஸ் மற்றும் துணைத் தலைவர் ஆலிவர் சுச்சேர் கூறினார்.
2015 ஆம் ஆண்டில் ஆப்பிள் மியூசிக் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பீட்ஸ் 1 உலகில் அதிகம் கேட்கப்பட்ட வானொலி நிலையங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.
ஆப்பிள் மியூசிக்கில் மட்டுமின்றி ஐபோன், ஐபாட், கார்ப்ளே, ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் டிவி, மேக், ஹோம் பாட் ஆகியவற்றில் மியூசிக்.ஆப்பிள்.காம் தளத்தில் கேட்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.