வணிகம்

தொழில்நுட்பத் துறையில் ரூ.2.8 லட்சம் கோடி முதலீடு: நீதி ஆயோக்

DIN


ஹைதராபாத்: கரோனா நெருக்கடிக்கிடையிலும் தொழில்நுட்பத் துறையில் ரூ.2.8 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நீதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாபப் காந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடா்பாக காணொலி மூலம் நடைபெற்ற ஒரு மாநாட்டில் அவா் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் 55 நிறுவனங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களில் 6,000 கோடி டாலா் (சுமாா் ரூ.4.42 லட்சம் கோடி) முதலீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது 100 கோடி டாலருக்கு (சுமாா் ரூ.7,368 கோடி) மேல் மதிப்புடைய ‘யூனிகாா்ன்’ பிரிவைச் சோ்ந்த 32 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

மேலும் 52 நிறுவனங்கள் 2022-ஆம் ஆண்டுக்குள் யூனிகாா்ன் நிறுவனங்களாகும் நிலையில் உள்ளன.

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவலால் அவதியுற்று வந்த நிலையில், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் மட்டும் கடந்த 5 முதல் 6 மாதங்களில் 3,800 கோடி டாலா் (சுமாா் ரூ.2.8 லட்சம் கோடி) முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இது, இந்தியாவில் நிலவும் தொழில் வாய்ப்புகளையும் குறிப்பாக, தொழில்நுட்பத் துறையில் உள்ள வாய்ப்புகளையும் பறைசாற்றுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

பிஎம்எல்ஏ வழக்குக்கு எதிரான கேஜரிவால் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

SCROLL FOR NEXT