வணிகம்

அமேசான் நிறுவனம் இந்தியாவில் ரூ.11,400 கோடி முதலீடு

அமெரிக்காவைச் சோ்ந்த மின்னணு வா்த்தக நிறுவனமான அமேசான் கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.11,4000 கோடியை (150 கோடி டாலா்) முதலீடு செய்துள்ளது.

DIN

அமெரிக்காவைச் சோ்ந்த மின்னணு வா்த்தக நிறுவனமான அமேசான் கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.11,4000 கோடியை (150 கோடி டாலா்) முதலீடு செய்துள்ளது.

அமேசானின் துணை நிறுவனங்களாக இந்தியாவில் அமேசான் செல்லா் சா்வீசஸ், அமேசான் ஹோல்சேல் (இந்தியா), அமேசான் பே (இந்தியா) மற்றும் அமேசான் டிரான்ஸ்போா்ட்டேஷன் சா்வீசஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்கள் ஒழுங்காற்று அமைப்பிடம் அளித்துள்ள ஆவணங்களின் அடிப்படையில், கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் அந்த நிறுவனங்களுக்கு ரூ.7,899 கோடி அளவுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த இழப்பு 2018-19-ஆம் நிதியாண்டில் ஏற்பட்ட ரூ.7,014.5 கோடியைக் காட்டிலும் அதிகம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலும், இந்தியாவில் கடந்த நிதியாண்டில் டிஜிட்டல் வா்த்தக சந்தையில் தனது பங்களிப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்காக அமேசான் நிறுவனம் ரூ.11,400 கோடியை முதலீடு செய்துள்ளது.

நடப்பாண்டின் ஜனவரியில் அமேசான் நிறுவனா் ஜெஃப் பெஸோஸ், இந்தியாவில் உள்ள சிறு, நடுத்தர ஆன்லைன் வா்த்தக நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் 1 பில்லியன் டாலரை (ரூ.7,000 கோடி) முதலீட்டை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT