முகப்பு
வணிகம்

கரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் தாமதமாகுமா?

2020ம் ஆண்டில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று சைபர் மீடியா ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:44 PM
பகிர்:

2020ம் ஆண்டில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று சைபர் மீடியா ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

உலகளவில் 2020 ஆம் ஆண்டில் 20 கோடி 5ஜி செல்போன்கள் விற்பனையாகும் என்று ஏற்கெனவே அமெரிக்க நிதிசேவை நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் கணித்துள்ளது.

இந்நிலையில், 5ஜி ஸ்மார்ட்போன்களில் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும் இது மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் சைபர் மீடியா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 

மேலும், '2020 ஆம் ஆண்டில் 5ஜி ஸ்மார்ட்போன் ஏற்றுமதி அளவுகளில் சுமார் 1 சதவீதத்திற்கு மட்டுமே பங்களிக்கும். அதன்பின்னர், 2025 க்குள் இதன் அளவு 144 மில்லியன் யூனிட்டுகளை எட்டக்கூடும் என்று தெரிவிக்கிறது. 10 முதல் 12 எண்ணிக்கையிலான,  5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆரம்பகால தொழில்நுட்பத்தை பின்பற்றுபவர்களுக்கு 5ஜி ஏற்றுமதி புதியதாக இருக்கும். 5ஜி ஸ்மார்ட் போன்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சீனா மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன் பாகங்களில் கிட்டத்தட்ட 85 சதவீதம் சீனாவில் இருந்து வருகிறது. அதேநேரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பினால் சீனா முடங்கியுள்ள நிலையில், இது இந்தியாவில் ஸ்மார்ட்போன் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது' என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

எனினும் 2020ம் ஆண்டில் இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →