முகப்பு
வணிகம்

உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பிளிப்கார்ட்டின் புதிய சேவை

பிளிப்கார்ட் விசாவால் இயக்கப்படும் விசா ஸேஃப் க்ளிக் (வி.எஸ்.சி) ஐ திங்களன்று அறிமுகப்படுத்தியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:24 PM
பகிர்:


பிளிப்கார்ட் நிறுவனம் விசாவால் இயக்கப்படும் விசா ஸேஃப் க்ளிக் (வி.எஸ்.சி) ஐ திங்களன்று அறிமுகப்படுத்தியது. இது இ-காமர்ஸ் தளங்களில் ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஓடிபி) தேவையை நீக்கும். நுகர்வோருக்கு தொந்தரவு இல்லாத மற்றும் பாதுகாப்பான கட்டண செயல்முறைக்கு விஎஸ்சி பயன்படுத்தும் என்று பிளிப்கார்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"ஆன்லைன் வர்த்தகங்களின் மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்றுதான் ஓடிபி அடிப்படையிலான அங்கீகாரமாகும். இதனால் குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர் பின்வாங்குவதை நாங்கள் கவனித்திருக்கிறோம் என்று பிளிப்கார்ட்டின் ஃபிண்டெக் அண்ட் பேமெண்ட்  குழுமத்தின் தலைவர் ரஞ்சித் போயனபள்ளி கூறினார்.

"வி.எஸ்.சி இந்த ஓடிபி-ஐ முழுமையான அங்கீகாரத்துடன் மாற்றியமைக்கிறது, வாடிக்கையாளர் அதிகப்படியாக சிரமம் கொள்ளத் தேவையில்லை. இந்த முயற்சியின் மூலம், சிற்சில பொருட்கள் வாங்குவோரின் இணைய வரத்து அதிகரிக்கும், அவர்கள் ஒரே கிளிக்கில் பொருட்களை வாங்கி விட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று போயனபள்ளி குறிப்பிட்டார்.

எளிமைப்படுத்தப்பட்ட தீர்வுகள் மற்றும் அணுகுமுறைகள் ஆகியவை காலத்தின் தேவை என்பதை உணர்ந்த பிளிப்கார்ட் நிறுவனம், நாடு முழுவதும் உள்ள கடைக்காரர்களுக்கான தவணை  மற்றும் மலிவு விலையில் பொருட்களை விநியோகக் கூடிய வரம்பை அதிகரித்துள்ளது.

அடுத்து 200 மில்லியன் வாடிக்கையாளர்களை உள்நுழைவதற்கான மிகப் பெரிய குறிக்கோளுடன், தவணை வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் மலிவு விலையில் ஷாப்பிங் அனுபவத்தை தர உதவும் வகையில் பிளிப்கார்ட் பே லேட்டர் மற்றும் கார்ட்லெஸ் கிரெடிட் போன்ற சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இந்தியாவில் உள்ள விசா டெவலப்பர்கள் குழு வாடிக்கையாளர் அனுபவத்தை அதிகரிப்பதற்கும், இந்திய இ-காமர்ஸ் சந்தையில் தனித்துவமான சவால்களைச் சமாளிப்பதற்கும் வி.எஸ்.சி.யை வடிவமைத்துள்ளது. இது சிக்கலான வழிமுறைகள் மற்றும் கஷ்டமான ஒன் டைம் பாஸ்வேர்டுகளை தவிர்த்து எளிமையாக பயனாளர்களுக்குப் பிடித்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று விசா இந்தியா மற்றும் தெற்காசிய குழுமத்தின் முதன்மை மேலாளர் டி.ஆர்.ராமச்சந்திரன் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →