வணிகம்

உர விற்பனை 83 சதவீதம் அதிகரிப்பு: மத்திய அரசு

உர விற்பனை ஜூன் காலாண்டில் 83 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

DIN

உர விற்பனை ஜூன் காலாண்டில் 83 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய அளவில் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும் நடப்பு 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் உள்நாட்டில் உர விற்பனை 111.61 லட்சம் டன்னை எட்டியது. இது, கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையான 61.05 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் 82.81 சதவீதம் அதிகமாகும்.

மொத்த உர விற்பனையில், யூரியா விற்பனை 67 சதவீதம் அதிகரித்து 64.82 லட்சம் டன்னாக இருந்தது. அதேசமயம், டிஏபி உரத்துக்கான தேவை ஜூன் காலாண்டில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, அதன் விற்பனை அந்த காலகட்டத்தில் இரண்டு மடங்கு அதிகரித்து 22.46 லட்சம் டன்னை எட்டியது.

மேலும், கலப்பு உர விற்பனையும் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து 24.32 லட்சம் டன்னாக இருந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT