வணிகம்

சீன வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்திய இந்திய செயலி; கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்

DIN

ஒரு மாதத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட 'ரிமூவ் சீனா ஆப்ஸ்' என்ற செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து  நீக்கப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியது என்பதாலும் தற்போது எல்லையில் சீனா, தனது படைகளைக் குவித்துள்ளதாலும், மேலும் பல காரணங்களாலும்  சீனப் பொருள்களை வாங்க மாட்டோம் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இதையடுத்து மொபைலில் உள்ள சீன செயலிகளை நீக்கும்பொருட்டு ஜெய்ப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று 'ரிமூவ் சீனா ஆப்ஸ்' (Remove China Apps) என்ற செயலியை கடந்த மே மாதத்தில் அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்திய சில நாளிலேயே இதனை ஆயிரக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்தனர். 

இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்தும் பட்சத்தில் மொபைலில் உள்ள சீன செயலிகளை அடையாளம் காட்டி அதனை நீக்க பயன்படுகிறது. 

தற்போது 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இதனை பதிவிறக்கம் செய்துள்ள நிலையில், 'ரிமூவ் சீனா ஆப்' என்ற செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து  நீக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று சீன செயலியான 'டிக் டாக்' செயலிக்கு எதிர்ப்பு கிளம்பி வருவதால், அதற்கு மாற்றாக மித்ரன் (Mitron) என்ற செயலியை பயனர்கள் பதிவிறக்கம் செய்து அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியும் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து  நீக்கப்பட்டுள்ளது. இந்த இரு செயலிகளையும் நீக்கியதற்கான காரணம் குறித்து கூகுள் நிறுவனத் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. கூகுள் நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒருசாரார் கூறி வருகின்றனர். 

மேலும் இந்த மொபைல் செயலி மூலமாக லட்சக்கணக்கானோர் தங்கள் மொபைலில் உள்ள சீன செயலிகளை நீக்கியதன் மூலமாக, சீன வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT