முகப்பு
வணிகம்

ஆப்பிள் ஐபேட் புரோ மற்றும் மேக்புக் ஏர் விரைவில் அறிமுகம்

ஆப்பிளின் அடுத்த புதுவரவாக ஐபேட் புரோ மற்றும் மேக்புக் ஏர் ஆகியவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

Updated On : 19 மார்ச், 2020 at 12:56 PM
பகிர்:

ஆப்பிளின் அடுத்த புதுவரவாக ஐபேட் புரோ மற்றும் மேக்புக் ஏர் ஆகியவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

11 அங்குல ஐபேட் புரோ (வைஃபை மாடல்) ரூ 71,900 ஆகவும், வைஃபை + செல்லுலார் மாடல் ரூ.85,900 முதல் தொடங்கும். 12.9 இன்ச் ஐபேட் புரோ வைஃபை மாடல் ரூ.89,900 ஆகவும், வைஃபை + செல்லுலார் மாடல் ரூ.1,03,900 ஆகவும் இருக்கும். 

இருமடங்கு வேகமான செயல்திறன், ப்ரோ கேமராக்கள், ப்ரோ ஆடியோ, லிடார் ஸ்கேனர் மற்றும் ஆகியவற்றுடன் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விடியோ வசதி உள்ளது. 

Advertisement

அதேபோன்று ஐபேட் புரோவுக்கான நவீன கீ போர்டு, 11 அங்குல ஐபேட் புரோ ரூ.27,900 மற்றும் 12.9 அங்குல ஐபேட் புரோவுக்கு ரூ.31,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபேட் புரோவில் உள்ள அமைப்பு சிறந்த புகைப்படங்களையும், 4கே வீடியோவையும் வழங்குகிறது. இது  12 எம்பி வைட் கேமரா மற்றும் 10 எம்பி அல்ட்ரா வைட் கேமராவையும் கொண்டுள்ளது.

மேலும், ஆப்பிள் மேக்புக் ஏர் நிறுவனம் 256 ஜிபி சேமிப்பு விலை ரூ.92,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 13 அங்குல ரெட்டினா டிஸ்ப்ளே மற்றும் கீ போர்டை கொண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.