வணிகம்

கூகுள் க்ரோம் செயலியை புதுப்பிக்க நிறுவனம் அறிவுறுத்தல்

DIN

பாதுகாப்பு கருதி க்ரோம் செயலியை புதுப்பிக்க வேண்டுமென கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி, மென்பொருள் பிழைகளைத்(bug) தவிர்க்கவும், பாதுகாப்பு கருதியும் க்ரோம் செயலியை புதுப்பிக்க(update) வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. 

க்ரோம் செயலியில் மென்பொருள் பிழை(zero day bug) ஏற்பட்டுள்ளதால் அதில் உள்ள தகவல்களை ஹேக்கர்ஸ் திருடும் வாய்ப்புள்ளது. எனவே, தரவுகளின் பாதுகாப்பு கருதி அதற்கான புதுப்பிக்கும் வசதியை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்த பிழையை சரிசெய்ய பிளே ஸ்டோரில் சென்று ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும். 

கடந்த இரு வாரங்களில் மட்டும் மூன்று முறை க்ரோம் செயலியில் இதுபோன்று பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதில் முதல் இரண்டு பிழைகள் கணினியில் க்ரோம் பயன்பாட்டாளர்களுகானது. தற்போது மூன்றாவதாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு க்ரோம் செயலியில் பிழை ஏற்பட்டுள்ளது. 

இவை அனைத்தும் ஒரே ஹேக்கிங் குழுவால் ஏற்படுத்தப்பட்டவையா என்பது குறித்து நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT